சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! 08/02/2025 / #sgnewsinfo, #Singapore, #worldnews சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம், தடுப்பூசி யால் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவிலிருந்து ஐந்து மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்ததாக கூறப்படுகிறது.இந்தோனேஷியாவிலேயே அந்த குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து போடப்பட்டது.தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படிப்பு தேவை இல்லை!!வேலை தெரிந்திருந்தால் சிங்கப்பூரில் வேலை!! சமூகத்தில் அந்த நோய் பரவுதற்கான வாய்ப்பு குறைவு என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையின் மூன்று நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.1978 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் இளம்பிள்ளை வாத நோய் பரவல் இல்லை.வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒரு குழந்தைக்கு 2006 ஆம் ஆண்டு இந்த வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது? FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==