சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது?
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை 8 வாரங்களுக்கு மீண்டும் குடியிருப்பு வட்டாரங்களில் சிங்கே ஊர்வலங்கள் நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சி மற்றும் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 9 வண்ணமயமான மிதவைகள்,மக்கள் மத்தியில் உலா வரும் கலைஞர்கள், பல இன சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் 17 நிமிட மேடை நிகழ்ச்சிகள் எனப் பலவிதமான கண்கவர் நிகழ்ச்சிகள் அதில் இடம்பெறும்.