11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!

11 மாத குழந்தை தூங்க மறுத்ததால் கடித்து கிள்ளி துன்புறுத்திய 24 வயதுடைய மியான்மர் நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தையின் உடலில் காயங்கள் தழும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பகல் நேரங்களில் ஓய்வில்லாமல் வேலை செய்வதாகவும் குழந்தை நன்றாக தூங்கிய பிறகு தான் தூங்க செல்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினார்.

இதனால் தமக்கு அன்றாடம் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றும் அந்த பணிப்பெண் கூறினார்.

வேலை செய்யும் வீட்டில் மொத்தம் மூன்று குழந்தைகளை அவர் கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

முதன்முதலில் சென்ற வருடம் நவம்பர் ஆறாம் தேதி அன்று குழந்தையின் கையில் கடித்தற்கான தழும்பு இருந்தது கண்டறியப்பட்டது.

ஆனால் குழந்தையே தன் கையைக் கடித்துக் கொண்டதாக முதலாளியிடம் கூறிய அந்தப் பெண் கூறினார்.அதன் பிறகு அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஒரு சில நாட்களில் குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் போது குழந்தையைக் கிள்ளியது கண்டறியப்பட்டது.

நவம்பர் 24ஆம் தேதி அந்தப் பெண் மீது அவரது முதலாளி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்மணிக்கு குழந்தையைக் கிள்ளி ,கடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.