சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!!
விமான நிலைய முனையத்தையும் விமானத்தையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜில் பயணிகள் விடப்பட்ட சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கிய மூன்று பயணிகள் வருகைப் பகுதிக்குள் நுழைய முடியாமல் ஏரோபிரிட்ஜ் பாலத்திலேயே விடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று சாங்கி விமான நிலையத்தில் முதல் முறையாக இந்த சம்பவம் நடந்ததாக அமைச்சர் கூறினார்.
அதோடு பாலத்தில் பயணிகள் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க தவறிவிட்டதாகவும்,அவர்கள் அதை பூட்டிவிட்டதாகவும் அமைச்சர் சொன்னார்.
பயணிகளில் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்ததால் விமான நிலைய ஊழியர் ஒருவர் பயணியுடன் இருந்தார்.
பாலத்தைத் திறக்கக் கோரி பல்வேறு தரப்பினரை அவர் தொடர்பு கொண்டார்.ஆனால் அவர் தவறான எண்களுக்கு தொடர்பு கொண்டதால் உதவி வருவதற்கு 16 நிமிடங்கள் தாமதமானதாக அமைச்சர் சீ கூறினார்.