இத ஒரு துளி வச்சா போதும்...!!!மருக்கள் சும்மா 6 நிமிஷத்துல உதிர்ந்திடும்...!!!

உடலில் சிலருக்கு ஆங்காங்கே மருக்கள் இருக்கும்.இது சிலருக்கு முகம்,கழுத்து போன்ற பகுதிகளில் சற்று பெரியதாகவே இருக்கும். இது போன்ற மருக்கள் பெண்களின் அழகையே கெடுத்துவிடும்.கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து சருமத்தின் மேல்புறத்தில் மருக்களை ஏற்படுத்துகின்றன. இம் மாதிரியான மருக்களை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே நீக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1.வெற்றிலை – ஒன்று
2.சுண்ணாம்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
🍁 முதலில் வெற்றிலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
🍁 பின்பு அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
🍁 சிறிதளவு சுண்ணாம்பை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய வெற்றிலையை போடவும்.
🍁 சுண்ணாம்பு கலந்த வெற்றிலையை எடுத்து மருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.
🍁 இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் மருக்கள் நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும்.
மருக்களை நீக்க உதவும் மற்றொரு வீட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
1.பூண்டு – நான்கு பல்
2.எலுமிச்சை சாறு
செய்முறை விளக்கம் :
🍁 முதலில் நான்கு பூண்டு பற்களை எடுத்து தோலை நீக்கவும்.
🍁 பிறகு அதை உரலில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.
🍁 அதன் பிறகு இந்த பூண்டு விழுதை ஒரு பாத்திரத்தில் போடவும்.
🍁 எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சாறு எடுத்து பூண்டு விழுதுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
🍁 இதனை மருக்கள் மீது காலை,மாலை என இருவேளை தடவி வந்தால் அவை காய்ந்து விரைவில் உதிர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
1.ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2.காட்டன் பஞ்சு -ஒன்று
செய்முறை விளக்கம்:
🍁 முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும்.
🍁 பின்னர் அதில் காட்டன் பஞ்சை நனைத்து மருக்கள் மீது தடவவும்.
🍁 இப்படி தினமும் ஐந்து முதல் ஆறு முறை செய்து வந்தால் மருக்கள் தானாக உதிர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
1.வாழைத்தோல் – ஒன்று
செய்முறை விளக்கம்:
🍁 வாழைப்பழத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
🍁 இதை மருக்கள் மீது தடவி சிறிது நேரம் உலர வைக்கவும்.
🍁 இப்படி செய்தால் மருக்கள் தானாக உதிர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
1.பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2.கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
🍁 ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்.
🍁 பிறகு கற்றாழையில் உள்ள தோலை நீக்கிவிட்டு அதிலிருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.
🍁 இதை பேக்கிங் சோடாவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும்.
FOLLOW US ON MORE ⏬:
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==