வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!!

வழுக்கை தலையில் முடி வளர...!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்குக் கூட வழுக்கை வந்து விட்டது. இந்த முடி உதிர்தல் பிரச்சனையால் சிலருக்கு திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காவிட்டால், அது விரைவில் உதிர்ந்து வழுக்கையாகிவிடும். இன்றைய இளைஞர்கள் பலர் வழுக்கைத் தலையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதற்கு வீட்டிலேயே சில பொருட்களை பயன்படுத்தி வழுக்கை தலையில் முடி வளரச் செய்யலாம்.

வழுக்கை தலையில் புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

💠 தக்காளி பழம் – ஒன்று

💠 கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:
✨️ முதலில் ஒரு நடுத்தர அளவு தக்காளியை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

✨️ பின்னர் மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் கற்றாழை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

✨️ பின்னர் இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் தெளித்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

✨️ அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.

தேவையான பொருட்கள்:-

💠 தக்காளி – ஒன்று

💠 சின்ன வெங்காயம்- ஐந்து

செய்முறை விளக்கம்:

✨️முதலில் தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

✨️ பின்பு சின்ன வெங்காயத்தை உரித்து, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

✨️ பின்னர் இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

✨️ பின்னர் இந்த சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் தெளித்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

✨️ பிறகு உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு அலசவும்.

இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் வழுக்கைத் தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள்:-

💠 தக்காளி – ஒன்று

💠 தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

✨️ பழுத்த தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுக்கவும்.

✨️ இதை தலை முழுவதும் தடவி சிறிது நேரம் ஊற விடவும்.

✨️ அரை மணி நேரம் கழித்து, உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் வழுக்கையான இடத்தில் புதிய முடி வளரும்.