துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெம்ஸி பகுதியை விளையாட்டு மற்றும் ஆரோக்கிய வசதிகள் கொண்ட இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் புதிய சில்லறை விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உணவு மற்றும் பானங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர்.

திரு. பக்கெட் சாக்லேட்டரி கடை வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் சாக்லேட்டுகளை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்காக பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூரின் நில ஆணையம் டெம்ஸி பகுதியை பல்வேறு வசதிகளுடன் கூடிய துடிப்பான இடமாக மாற்ற விரும்புகிறது.

நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் பல்வேறு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக டெம்ஸி பகுதியின் வணிகச் சூழல் மாறிவிட்டது. நல்ல உணவைத் தவிர, புதிய அம்சங்கள் அப்பகுதியில் நிறைந்திருக்கின்றன.

ஏற்கனவே உள்ள சில கடைகளின் குத்தகை மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே புதிய கடைகள் அப்பகுதியை அலங்கரிக்கும் போது அது மேலும் புத்துயிர் பெறும் என்று ஆணையம் தெரிவிக்கிறது.