முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்குவது எப்படி...???
பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் தாடை போன்றவற்றில் ஆண்களைப் போலவே ரோமங்கள் இருக்கும். இது பார்ப்போரை முகம் சுளிக்க வைப்பதோடு பெண்களுக்கு உண்டான அழகையே கெடுக்கிறது. இதுபோன்ற பிரச்சனை உள்ள பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் நடமாட கூட கூச்சப்படுவர். ஆண்களைப் போன்ற விகாரத் தோற்றத்தால் சில பெண்கள் மன நிம்மதியின்றி காணப்படுவர்.இதற்காக கடைகளில் விற்கும் பல கிரீம்களை உபயோகித்தும் ஆயிரக்கணக்கில் பியூட்டி பார்லர்களில் சிகிச்சை மேற்கொண்டாலும் இதற்கு நிரந்தர தீர்வு என்பது இருப்பதில்லை. இப்படி முகத்தில் வளரும் முடிகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அகற்றலாம்.
சர்க்கரை
சிறிதளவு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள முடிகள் மறையத் தொடங்கும்.
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டரில் முடியின் வளர்ச்சியை தடுக்கும் பண்பு உள்ளது.
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக காய விடவும். பின்பு ஈரத் துணியை கொண்டு லேசாக துடைத்து எடுத்தால் முடியெல்லாம் நீங்கிவிடும்.இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் பவுடரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டு விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள முடிகள் மறையும்.
தேன் மற்றும் சர்க்கரை
சக்கரை பொதுவாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தேவையில்லாத முடிகள் வளர்வதை தடுக்கிறது. மேலும் தேன் சருமத்தை பொலிவாக மாற்ற உதவும்.
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சக்கரை 1 தேக்கரண்டி தேன் கலந்த கலவையை எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் முடி இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளை கரு சருமத்தின் இறந்த செல்களை நீக்க வல்லது.
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் இரண்டு தேக்கரண்டி சோள மாவு ஒரு தேக்கரண்டி சக்கரை மூன்றையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்பு உரித்து எடுத்தால் தேவையில்லாத முடிகள் நீங்கும்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் சில பப்பாளி துண்டுகளை நன்றாக மசித்து அதில் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தில் முடி இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை வெதுவெதுப்பான நீரில் கருவினால் முடிகள் உதிர தொடங்கும்.
மேலே கூறிய குறிப்புகளை பயன்படுத்தி முகத்தில் மட்டுமல்லாது உடம்பில் தேவையில்லாத பகுதிகளில் இருக்கும் முடியையும் இதேபோன்று அகற்றலாம்.