ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!!

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்...!!!

ஆஸ்திரேலியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் நினைவுச் சின்னத்தை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

சிட்னியில் உள்ள கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது.

சிலையின் மூக்கு மற்றும் கைகள் சிதைக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் படையெடுப்பு தினமாக கருதுகின்றனர்.

பழங்குடியின மக்கள், தங்கள் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்ததாகவும், இந்த நாள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுபடுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

அவர்களில் பலர் தேசிய தின கொண்டாட்டங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.