IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்...!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்...!!!

இந்தியா Vs இங்கிலாந்து T20 முதல் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

வானிலை சாதகமாக உள்ளதா..??

வானிலையைப் பொறுத்தவரை சென்னையில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இன்றைய தினம் ஈரப்பதமாக இருக்கும். வெப்பநிலை 23°C முதல் 29°C வரை இருக்கும். இது வழக்கமான சென்னை வானிலையை விட ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான சூழ்நிலையை வழங்குகிறது.

பிளேயிங் லெவன் கணிப்பு:

இந்தியா Vs இங்கிலாந்து 2வது T20 பிளேயிங் லெவனில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, பாண்டியா, ரிங்கு சிங், வாஷிண்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்த அணியை பொறுத்தவரை பில் சால்ட் (WK), பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (C), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் ஆகியோர் விளையாடுகின்றனர்.

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…

இன்று இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் T20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதனால் போட்டியை காண டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மெட்ரோ ரயில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அதாவது போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போட்டியை காண வரும் ரசிகர்களும் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் டிக்கெட் வைத்திருந்தால் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.மேலும் இன்று போட்டி நடைபெற இருப்பதால் கடைசி ரயில் இரவு 12 மணிக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.