இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா... அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார்.

முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அணியின் கேப்டன் பட்லர் மற்றும் ஹாரி புரூக், லிவிங்ஸ்டன் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி வெற்றிக்கான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதனால் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் இந்திய அணி இங்கிலாந்தை சுலபமாக வீழ்த்தியது.

சமீபகாலமாகவே வருண் சக்கரவர்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொல்கத்தா அணியில் இவரின் பங்கு அபாரமாக இருந்தது. அதனால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தேசிய அணிக்கும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அடுத்த T20 உலக கோப்பையின் போது வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.கடந்த முறை கொல்கத்தா அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றதற்கு இவரின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.மேலும் இவர் மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவில் அடுத்த T20 உலக கோப்பை நடைபெறும் போது இவர் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருப்பார். அவர் பந்துவீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். பந்துகளை நேராக ஸ்டெம்ப் லைனுக்கு வீசுகிறார். மேலும் தற்போது லெக் ஸ்பின் கற்றுக்கொண்டு முன்பை விட பெரிய கம் பேக் கொடுத்திருக்கிறார் “என்று கூறியுள்ளார்.