அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!!

அதிர்ச்சி...!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை...!!

பிரட்டனில் உள்ள காவேண்டிரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை அந்தத் தவறை ஒப்புக்கொண்டது.

இந்த நபரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை மேலும் 12 பேருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது அதிகபட்சமாக 6 மாதங்கள் உட்கொள்ளலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் வழிகாட்டுதல் கூறுகிறது.

தொடர்ந்து மருந்தை உட்கொண்டதால் அந்த நபருக்கு சோர்வு, வயிற்று வலி, குமட்டல், தலைசுற்றல் ஆகியன ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஓய்வு பெற்ற பிறகுதான் அந்தத் தவறு தெரியவந்துள்ளது.