திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!!

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்...!!!

திருமணம் என்றாலே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்வார்கள்.. ஒவ்வொருவரும் தனது திருமணம் குறித்த கனவுகளை பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். அதில் குறிப்பாக பெண்களைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களின் ஆசை நீண்டு கொண்டே போகும்.. புடவை,நகை,அலங்காரம் மற்றும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கேண்டிட் போட்டோகிராபி முதல் அனைத்தும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மணமகனிடம் முன்பே சொல்லி வைத்து விடுகிறார்கள்…

அப்படி தன் ஆசைகளை நிறைவேற்றும் வருங்கால கணவருக்காக மனைவி சமைப்பது முதல் குடும்ப பொறுப்புகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதை பொறுப்பாக கவனிக்க தொடங்குகிறாள்..

இப்படி திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்கள் தங்களது கூந்தல் மற்றும் சருமத்திற்கு எவ்வாறு மெனக்கெட வேண்டும் என்பதை பார்க்கலாம்…

வீட்டில் செய்ய வேண்டியது என்ன…

🧚‍♀️ திருமணத் தேதி நிச்சயக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து உடலை சூடு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். அப்போது தான் கூந்தலும் சருமமும் வறண்டு போகாமல் இருக்கும்.

🧚‍♀️ எண்ணெய் தேய்க்க பிடிக்காதவர்கள் ஹேர் சீரம் உபயோகிக்கலாம். இதில் வறண்ட கூந்தலை சரி செய்யும் சீரம், முடி வளர்ச்சியை தூண்டுகிற சீரம், தலை ஸ்கால்ப்புக்கான சீரம் என கடைகளில் பல வகைகளில் கிடைக்கிறது.
இதில் எது உங்கள் கூந்தலுக்கு ஏற்றது என்பதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

🧚‍♀️ பாதாம் எண்ணெயில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான அரோமா எண்ணையை கலந்து சில கடைகளில் விற்கின்றனர் அதையும் உபயோகிக்கலாம்.

🧚‍♀️ பாதாம் எண்ணெயை உடலில் தேய்த்து வர உடல் பொலிவு பெறும்.

🧚‍♀️ கடலை மாவுடன் தயிர் கலந்து 15 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

🧚‍♀️ இதற்கு பதில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நலங்கு மாவை உபயோகிப்பதால் சருமம் பொலிவு பெறும்.

🧚‍♀️ முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கரும்புள்ளிகள் இருக்கும் இதற்கு ஓட்ஸ் உடன் பால் கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 ஊற வைத்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும்.

🧚‍♀️ பப்பாளி அல்லது ஆப்பிளுடன் பால் கலந்து முகம்,கழுத்து,முதுகு போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் பளிச்சென்ற நிறம் கிடைக்கும்.

🧚‍♀️ வறண்ட சருமம் இருப்பவர்கள் பாலாடையில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் பளபளப்பாக இருக்கும்.

பார்லரில் செய்ய வேண்டியவை….

🧚‍♀️ வெயிலில் செல்லும் பெண்களுக்கு இருக்கின்ற ஒரே பிரச்சனை சீரற்ற தோல் நிறம். முகத்தில் கிரீம் போன்றவற்றை உபயோகிப்பதால் முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நெற்றி, கழுத்து மற்றும் மூக்கின் நுனி போன்றவை கருப்பாக இருக்கும்.இதற்கு பார்லரில் டி டேன் சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் முகம், கழுத்து, முதுகு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.

டி டேன் சிகிச்சை வெயிலினால் ஏற்பட்ட தோல் கருமையை நீக்குகிறது.

🧚‍♀️ ஃப்ரூட் ஃபேஷியல், க்ளோ ஃபேஷியல் என உங்களுக்குப் பிடித்த ஃபேஷியலைப் தேர்வு செய்யலாம். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் கோல்ட் ஃபேஷியலுக்கும், எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்கள் வைர ஃபேஷியலுக்கும் செல்லலாம். முத்து ஃபேஷியல் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.

🧚‍♀️ இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஜுவல் ஃபேஷியல். தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் பெரிடாட் ஸ்டோன் ஆகியவற்றின் சிறிய துகள்களைக் கொண்டு கிரீம் ஃபேஷியல் செய்வார்கள். இதனைச் செய்வதால் மணப்பெண்களின் முகம் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜொலிக்கும்.

🧚‍♀️ மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றை பார்லரில் மட்டும் செய்து கொள்ளுங்கள். கைகளில் டி டேன் செய்து கொண்டு மெஹந்தியை வைத்தால் பளிச்சென்று தெரியும்.

🧚‍♀️ கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இவற்றையெல்லாம் செய்து கொண்டு அதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் அது பிரச்சனையில் முடியும் என்பதற்காக மணப்பெண்கள் கல்யாணம் நிச்சயக்கப்பட்ட உடனே செய்து பார்த்து எது ஒத்துக்கொள்கிறது என்பதை தெரிந்து கொண்டு பயனடையலாம்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==