இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா...??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்தை கராச்சி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை ஜெர்சியில் வரும் லோகோவில் அச்சிட போவதில்லை என தெரிவித்தது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியின் அதிகாரப்பூர்வ சின்னம் தொடர்பான விவகாரத்தில் ஐசிசி வழிகாட்டுதல்களை பிசிசிஐ பின்பற்றும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் தேவ்ஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கேப்டன்கள் அறிமுக விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்வாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள துபாய், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று மைதானங்களில் மற்ற அணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். இந்தியா அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டியானது துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியானது துபாயில் நடைபெறும். ஒருவேளை இந்திய அணி தகுதி பெறவில்லை என்றால் இறுதிப் போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==