பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!!

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!!

பாத்தாம் தீவில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து தப்பிய முதலைகளில் 34 பிடிபட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதலை பண்ணையில் பெய்த கனமழையால் முதலை குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி சேதமடைந்தது.

அதனால் முதலைகள் தப்பின.

அந்த முதலைகள் அனைத்தும் பாத்தாமில் மீட்கப்பட்டன.

தப்பியோடிய முதலைகள் மீண்டும் சிங்கப்பூருக்கு நீந்திச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.