பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!!

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

இதில் சுமார் 66,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 30 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை காண முடிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விளையாட்டானது மாணவர்களை அனைத்து வகைகளிலும் மேம்படுத்துகிறது.

மாணவர்களிடையே குழு மனப்பான்மை, ஒழுக்கம், சவால்களை எதிர்கொள்ளும் திறன் போன்ற பண்புகள் விளையாட்டின் மூலம் வெளிப்படுகிறது.

அவர்களுடன் வெவ்வேறு பின்னணியில் உள்ள மாணவர்கள் பொதுவான இலக்கை நோக்கிச் செயல்படுவதைக் காணலாம் என்று திரு சான் கூறியுள்ளார்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==