“சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங்

"சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்"- பிரதமர் வோங்

பொது வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகளை மலிவு விலையில் அரசு எப்போதும் வைத்திருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

வீடுகள் கட்டுபடியான விலையில் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திரு.வோங் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்துரையாடலில் பேசினார்.

“சிங்கப்பூர் கனவு” என்பது கலந்துரையாடலின் கருப்பொருளாக இருந்தது.

NUS இல் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜனவரி 21 அன்று நடந்த உரையாடலின் போது எதிர்காலத்தில் சவால்கள் வந்தாலும் சிங்கப்பூர் அவற்றை முறியடிக்கும் என்று திரு.வோங் கூறினார்.

சிங்கப்பூர் கனவு மற்றும் இளைஞர்கள் காண விரும்பும் எதிர்காலம் குறித்தும் விவாதத்தில் பேசப்பட்டது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==