நாய் பற்றிய சுவாரசியமான தகவல்…

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்...

🐕 உலகின் மிகப் பழமை வாய்ந்த நாய் எகிப்து நாட்டைச் சேர்ந்த சலுக்கி இனவகை நாயாகும்.

🐕 நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்கு.

🐕 நாயின் மோப்ப சக்தி மனிதனை விட 10,000 மடங்கு அதிகமாம்.

🐕 நாய் மனிதனை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலியைக் கேட்கும் திறன் கொண்டது.


🐕 நாயின் வாழ்நாள் சுமார் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும்.

🐕 வளர்ந்த நாய்களுக்கு 42 பற்களும் குட்டி
நாய்களுக்கு 28 பற்களும் இருக்கும்.

🐕 ஒரு நாயினால் ஒரு மணி நேரத்திற்கு 19 மைல் தூரத்திற்கு ஓட முடியுமாம்.

🐕 மனிதன் பேசக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாயினால் புரிந்து கொள்ள முடியுமாம்.


🐕 நாயின் மூக்கு காய்ந்த நிலையில் இருந்தால் அதற்கு உடல்நிலை சரியில்லை என்று அர்த்தமாம்.

🐕 மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் தூங்கும் போது கனவு வருமாம்.


🐕 நாயின் மூக்கு மற்றும் பாதம் மட்டுமே வியர்க்கக் கூடியதாக இருக்குமாம்.

🐕 120-230 பவுண்டுகள் எடையுள்ள இங்கிலீஷ் மாஸ்டிஃப் உலகிலேயே அதிக எடை கொண்ட நாய் இனமாகும்.

 

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==