அமெரிக்காவில் Uber டிரைவர் ஒருவர் வேலைக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொலராடோ மாகாணத்தில் Uber டிரைவர் கெவின் ஃபர்மன் என்பவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் Bowie என்ற நாயை அமர வைத்து அழைத்துச் செல்கிறார்.
காரில் ஏறும் பல பயணிகள் காரில் நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
சிலர் நாயுடன் தங்களது பயண நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுகின்றனர்.