காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! 16/01/2025 / #america, #americanews, #sgnewsinfo, #worldnews காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயால் 12,300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.இந்தக் காட்டு தீச் சம்பவத்தில் விக்டோரியா டிசாண்டிஸ் என்ற பெண்ணின் வீடும் எரிந்தது.அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் தீப் பற்றியதால் எச்சரிக்கை ஒலி அடித்தது. டிசாண்டிஸ் வீட்டை விட்டு வெளியேற சில நிமிடங்களே இருந்தன.அவர் உடைமைகளை எடுக்க முடியவில்லை. உடனே அவர் தனது மகள் மற்றும் நாயுடன் வீட்டில் இருந்து தப்பினார்.காரை ஓட்டிச் சென்றபோது காற்றில் தீப்பொறிகள் தெரிந்தது.வீட்டின் வெளியே புல்வெளியில் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார். சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம்!! படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பாதுகாப்பான இடத்திற்கு வந்தடைந்த பிறகுதான், டிசாண்டிஸ் தனது திருமண மோதிரத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார்.வேறு மோதிரத்தை வாங்கலாம் கவலைப்படாதே என்று தன் கணவர் கூறினாலும் டிசாண்டிஸுக்கு அந்த திருமண மோதிரத்தை மறக்க மனம் இல்லை..உடனடியாக டிசாண்டிஸ் ஏல்டடேனா பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.வீடு எரிந்து சாம்பலானது. அதில் சாம்பல் நிறத்தில் உள்ள மோதிரத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.அவர் வீட்டில் மோதிரத்தைத் தேடத் தொடங்கியபோது சில தீயணைப்பு வீரர்கள் அவருக்கு உதவியதாக கூறப்படுகிறது.அவரின் திருமண மோதிரம் வீட்டின் கூரை, அறைகலன் மற்றும் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாக டிசாண்டிஸ் கூறினார். மோதிரம் சற்று உருகிய நிலையில் இருந்தாலும் மோதிரம் திரும்ப கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார்.“சாம்பலுக்கு இடையில் இவ்வளவு சிறிய மோதிரத்தை கண்டுபிடிக்க முடிந்தது நம்பமுடியாததாக இருந்தது,” என்று அவர் கூறியுள்ளார்.FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!