சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக்கு Hongbao எனப்படும் சிவப்பு பரிசு உறைகளை அச்சிடும் நிறுவனங்கள், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வகையில் மாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒருமுறை பயன்படுத்தும் உறைகளுக்குப் பதிலாக,அலங்காரப் பொருட்களாக அல்லது தாவரங்களாக வளரக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன.
பாரம்பரிய hangbaos ஐ விட தற்பொழுது உருவாக்கப்படும் புதிய உறை சற்று விலை அதிகம் என்றாலும், அவற்றின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகச் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.