பாஸ்போர்ட்டில் எழுதியதால் குடிநுழைவு மறுக்கப்பட்ட அமெரிக்கப் பயணி..!!!
போலந்துக் குடிவரவு அதிகாரிகள் கடப்பிதழில் எழுதிய பயணியை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது.
அமெரிக்கப் பெண் புதன்கிழமை (ஜனவரி 8) லண்டனில் இருந்து போலந்துக்குச் சென்றார்.
அவரது பாஸ்போர்ட்டில் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே விமான நிலையத்தின் பெயர்களும் இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.