ஜெர்மனிக்குச் சட்டவிரோதமாக சூட்கேஸ்களில் கடத்தப்பட்ட பொருள்…!!!

ஜெர்மனிக்குச் சட்டவிரோதமாக சூட்கேஸ்களில் கடத்தப்பட்ட பொருள்...!!!

ஜெர்மனியில் பெண் ஒருவர் 100 கிலோ எடையுள்ள சாக்லேட்டுகளுடன் நாட்டுக்குள் நுழைய முயன்றார்.

அந்தப் பெண் சாக்லேட்டுகளுக்கு உரிய வரியைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனால் அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இவர் கொண்டு வந்த 3 சூட்கேஸ்களிலும்
சாக்லேட்டுகள் இருந்தன.

அவற்றின் விலை 2,100 யூரோக்கள் (சுமார் 2,960 சிங்கப்பூர் வெள்ளி) என்று கூறப்படுகிறது.

அந்தப் பெண் ஜெர்மனிக்குச் சாக்லேட்டுகளை விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சாக்லேட்டுகளின் ரேப்பர்களில் பெயர்கள் எழுதப்படவில்லை.

அது சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அந்தப் பெண் வைத்திருந்தது ‘துபாய்’ சாக்லேட்டுகள் என்று கூறப்படுகிறது.

பிஸ்தா பேஸ்ட் மற்றும் சேமியா போன்ற மாவு துண்டுகள் நிரப்பப்பட்ட அந்த சாக்லேட்டுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==