சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த Skill Future $500 நிதியை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!!!

சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த Skill Future $500 நிதியை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் வழங்கும் $500 SkillsFuture ஸ்பெஷல் டாப்-அப்பை ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

SkillsFuture நிதியைப் பயன்படுத்தாமலேயே பலர் பயிற்சிக்குச் சென்றதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

2023 இல் SkillsFuture ஆதரவு பயிற்சியில் பங்கேற்ற 520,000 பேரில் பாதி பேர் அவர்களின் முதலாளிகளால் அனுப்பப்பட்டவர்கள்.

கடந்த ஆண்டு (2024) நவம்பர் 26ஆம் தேதி வரை சுமார் 26 சதவீதம் பேர் மட்டுமே இந்தத் தொகையைப் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தொகையை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 500 வெள்ளியை பயன்படுத்தாதவர்கள் சரியான முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் திட்டத்தில் திறன் மற்றும் கல்வி தொடர்பான சுமார் 30,000 பயிற்சிகள் உள்ளன.

பயிற்சியில் சேர விரும்புவோர் mySkillsFuture இணையதளத்தில் அதன் பட்டியலைச் சரிபார்த்து விருப்பமான பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம்.

SkillsFuture நிதியுதவி மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க சமூக அளவில் அதிக வசதியாளர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் சான் கூறினார்.

பயிலரங்குகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

500 வெள்ளித் தொகையை பயன்படுத்தியவர்கள் மிகக் குறைவானவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று டாக்டர் வான் ரிஸால் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் சான் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==