தாய்மொழி கற்றலால் ஏற்படும் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒருவர் தனது சொந்த கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு அதனுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அதே தாய்மொழியைப் பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களுடன் இணைந்து, வட்டாரத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தாய் மொழியின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
மொழித்திறன் இல்லாத மாணவர்களுக்குத் தாய்மொழியை கற்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா? என்று பாட்டாளி கட்சியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் திரு.ஜேமஸ் ஜெரோம் லிம் கேள்வி எழுப்பியிருந்தார்.
மொழி அடிப்படையிலான பாடங்களில் சிறப்பாகச் செயல்பட போராடும் மாணவர்களுக்கு இது சவாலாக இருக்குமா என்றும் கேட்கப்பட்டது.
இதற்கு கல்வி அமைச்சர் சான் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
தாய்மொழி கற்பவர்கள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளனர் என்பதை கல்வி அமைச்சகம் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.