மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

 

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரைச் சந்தித்தார்.

11வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்புக்காக பிரதமர் வோங் மலேசியா சென்றுள்ளார்.

அங்கு அவர் மலேசிய அரசரை சந்தித்தார்.

சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்பிலிருந்தும் வணிகங்களுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் நீண்டகால, பரந்த மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன.

இருதரப்பு உறவுகளில் வலுவான,நீண்ட கால ஆதரவிற்காக திரு.வோங் சமூக ஊடகங்களின் மூலம் மாமன்னருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் உறவை மேலும் வலுப்படுத்த மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்து மாமன்னரிடம் பேசியதாக திரு.வோங் கூறினார்.

 

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==