சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்...!!!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருவாட்டி ஹாரிஸ் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்திக்கவுள்ளார்.

மூத்த அமைச்சர் திரு.லீ சியன் லூங் அவருக்கு இஸ்தானாவில் மதிய விருந்து அளிப்பார்.

சாங்கியில் உள்ள கடற்படைத் தளத்தை திருவாட்டி ஹாரிஸ் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக திரு. டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன், திருவாட்டி ஹாரிஸின் கடைசி அதிகாரத்துவப் பயணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் வெற்றிகளை ஹாரிஸ் முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பாதுகாப்பிற்கு அமெரிக்க இராணுவம் எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

இம்மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு திருவாட்டி ஹாரிஸ் பயணம் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

திருவாட்டி ஹாரிஸ் பஹ்ரைன் மற்றும் ஜெர்மனிக்கு ஆகிய நாடுகளுக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.