சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!!
சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால் எங்கும் சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் மற்றும் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.
இது புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே ஒரு பண்டிகை கால உணர்வை ஏற்படுத்துகிறது.
சிங்கப்பூரில் கார் உரிமையாளர் ஒருவர் இதற்கு ஒரு படி மேலே சென்று சீன புத்தாண்டை முன்னிட்டு தனது காரை பிரமாண்டமாக அலங்கரித்துள்ளார்.
கார் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பாம்பு,சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் புகைப்படங்களும், அதிர்ஷ்டத்தை குறிக்கும் சீன எழுத்துகளும் இடம்பெற்றிருந்தன.