சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பல அம்சங்கள் குறித்து நன்றாக விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் பிரதமர் லாரன்ஸ் வோங் புத்ரா ஜெயாவுக்குச் சென்றுள்ளார்.
சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் மாதாந்திர கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திரு.அன்வார் நேற்று (ஜனவரி 6) திரு.வோங்கிற்கு இரவு விருந்து அளித்தார்.
இருநாட்டு தலைவர்களும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.