நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்...!!!
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிலர் சுரங்கங்களில் சிக்கியுள்ளனர்.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தபோது வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக இறங்கினர்.
சுரங்கத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இருந்தனர்.
அவர்களில் பலர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
நிலக்கரிச் சுரங்கம் நிலத்தடி நீரில் மூழ்கியதால், குறைந்தபட்சம் ஒன்பது தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்களன்று தெரிவித்தார்.