சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!!

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்...!!!

சிங்கப்பூர்: டௌன்டவுன் பாதையை வடக்கு-தெற்கு ரயில் பாதையுடன் இணைக்க உதவும் வகையில் 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

மொத்தம் 3 புதிய நிலையங்கள் கட்டப்படும் என தரைவழி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல் ரயில் நிலையம் சுங்கே கடுத் அவென்யூவில் நிலத்தடி நிலையமாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) திங்கள்கிழமை (ஜனவரி 6) அறிவித்தது.

இரண்டாவது நிலையம் DTLக்கான புதிய முனைய நிலையமாக இருக்கும்.இது நிலத்தடி பரிமாற்ற நிலையமாக இருக்கும்.

இந்த 2 நிலையங்களும் டௌன்டவுன் பாதையை வடக்கு-தெற்கு ரயில் பாதையுடன் இணைக்கும் முனையங்களாக இருக்கும்.

தற்போது வடக்கு-தெற்கு ரயில் பாதையில் கிராஞ்சி-இயூ டீ நிலையங்களுக்கு இடையே ஒரு முனையம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரயில் நிலையங்கள் வடக்கு- மேற்கு பகுதிகளில் வசிப்பவர்களின் பயண நேரத்தை குறைக்கும் என்று ஆணையம் நம்புகிறது.

எடுத்துக்காட்டாக, இயூ டீ கிராமத்திலிருந்து சைனாடவுனுக்குப் பயணிக்கும் பயணிகளின் பயண நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

இதனால் பயணிகள் வெகு விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==