கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 13 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் அனைவரும் 22 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களில் வியட்நாமைச் சேர்ந்த 6 பெண்களும் சிங்கப்பூரைச் சேர்ந்த 7 ஆண்களும் அடங்குவர்.
சிங்கப்பூரில் போலித் திருமணம் பதிவு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.