புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் முயல்களின் தற்போதைய நிலை…!!

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் முயல்களின் தற்போதைய நிலை...!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் முயல்கள் சமீபத்தில் கைவிடப்பட்டதாக முயல் பாதுகாவலர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஸெங்குவா இயற்கை பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் 6 முயல்கள் காப்பாற்றப்பட்டதாக Bunny Wonderland குழு தெரிவித்துள்ளது.

5 முயல்களை குழு காப்பாற்றியதாகவும் ஒரு முயலை விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பூங்காவில் முயல்கள் கைவிடப்படுவதாக அந்தக் குழு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

கைவிடப்பட்ட கூண்டில் ஒரு முயலை கண்டுபிடித்ததாக அது கூறியது.

பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட ஐந்தாவது முயல் இது என்று கூறப்படுகிறது.

மேலும் 3 முயல்கள் பூங்காவில் சுற்றித் திரிந்து அவற்றைத் தேடி வருவதாக Bunny Wonderland குழு கூறியது.

இந்நிலையில் ஜனவரி 4 அன்று, Bunny Wonderland, 468A சேகர் சாலைக்கு அருகில் காணப்பட்ட கைவிடப்பட்ட மூன்று முயல்களைத் தேடுமாறு தன்னார்வலர்களுக்கு தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தது.

அவற்றில் நேற்று (ஜனவரி 5) ஒரு முயல் கண்டுபிடிக்கப்பட்டது.

Bunny Wonderland குழு மீதமுள்ள 2 முயல்களைப் பிடிக்க முனைகிறது.

இந்நிலையில், முயல்கள் கைவிடப்படுவதாக விலங்குகள் நல மருத்துவச் சேவைப்பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==