பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!
மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதியினர் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளனர்.
இந்த ஜோடியின் அதிரடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருகிறது.
இந்த தம்பதியினர் வீட்டில் மலைப் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அரை மணி நேரம் கடந்தும் யாரும் வராததால் வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தம்பதியினர் தாங்களாகவே வீட்டில் இருந்து மலைப்பாம்பை அகற்ற முடிவு செய்தனர்.
அவர்களது வீட்டில் ஏற்கனவே பாம்பு பிடிக்கும் கருவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.