ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட 35 பேர்…!!!

ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...!!! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட 35 பேர்...!!!

சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள 3 மாடி வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் 305ல் உள்ள வீட்டின் முதல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அது மேல் தளங்களுக்குப் பரவியதால், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் உடனடியாக வீட்டினுள் புகுந்து தீயை அணைக்க போராடினர்.

வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இருந்து அதிகாரிகள் தீயை அணைக்க முயன்றனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்கத்தில் இருந்த 35 பேரை வெளியேற்றினர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை முகநூலில் பதிவிட்ட புகைப்படங்கள் வீட்டின் சேதமடைந்த உட்புறத்தைக் காட்டுகின்றன.

புகைப்படத்தில் வீடு முழுவதும் எரிந்து கருப்பாக காட்சியளிக்கிறது.

இந்தத் தீ விபத்துச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==