உலோகப் பொருள் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் கென்யா விண்வெளி நிறுவனம் ஆய்வு நடத்தியது.
உலோகம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
உலோகம் விழுந்ததில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் பாதுகாப்பு குறித்த அச்சமும் இல்லை என்று கூறப்படுகிறது.
விண்வெளி ஆய்வுகள் உலகளவில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூமியின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் உருவாக்கிய பொருட்கள் விழுவது குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் இருந்து விழும் இதுபோன்ற பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உலக நாடுகள் தற்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளன.