சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!!

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!!

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 39 வயது மற்றும் 63 வயதுடைய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சோவா சூ காங் வே மற்றும் சோவா சூ காங் நார்த் 7 சாலை சந்திப்பில் மதியம் 3 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்த விபத்தில் மூன்று லாரிகள் ஒரு வேன் மற்றும் ஒரு Prime mover சமந்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு குடிமைத் தற்காப்புப் படை விரைந்த போது லாரி டிரைவர் ஒருவர் சீட்டில் சிக்கிக் கொண்டு இருந்தததாகவும்,அந்த நபரை ஹைட்ராலிக் மீட்பு இயந்திரம் மூலம் மீட்கப்பட்டதாக கூறியது.

மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us on :

http://Telegram : https://t.me/sgnewsinfoo

http://Facebook : https://www.facebook.com/profile.php?

http://Instagram : https://www.instagram.com/sg_news_info/profilecard/?