Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! 31/12/2024 / #sgnewsinfo, #southkorea, #worldnews Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! டிசம்பர் 29-ஆம் தேதி Jeju air விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியாகினர்.அந்த விபத்திற்கு பிறகு பயணிகள் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக அந்நிறுவனம் கூறியது.அதிலும் குறிப்பாக தாங்கள் எந்த ரக விமானத்தில் செல்கிறோம் என்று பயணிகள் கேட்டு விசாரிப்பதாகவும், பயண முகவர் நிறுவனங்கள் கூறின.தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பயண முகவர் நிறுவனத்தில் 400 பேரிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக நேற்று கூறியது. போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது...!!! ஒரே நாளில் 68, 000 பேர் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக Jeju Air நிறுவனம் நேற்று தெரிவித்தது.போயிங் 737-800 ரக விமானமாக இருந்தால் அவற்றை ரத்து செய்யுமாறு பயணிகள் கேட்பதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!