சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும்.

இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள்.

அவர்கள் 16 முதல் 66 வயது வரை உள்ளவர்கள்.

அவர்கள் பண மோசடி செய்தல்,கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 13-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வர்த்தக குற்ற விசாரணை பிரிவு மற்றும் காவல்துறையின் ஏழு நிலப் பிரிவுகளின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளிடம் பிடிபட்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தனர்.

பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு அல்லது தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக என்றால்,அவர்களே அதற்கு பொறுப்பேற்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.