உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!!

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 வயதில் இயற்கை எய்தினார்.

டாக்டர்.மன்மோகன் சிங் இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்களில் ஒருவர்.

இந்தியாவின் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார்.அவர் 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்தார்.

தாராளமாயக் கொள்கைகளுடன் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முன்னெடுத்த பெருமை டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு உண்டு.

இந்தியாவின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் இவரும் ஒருவர்.

டாக்டர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ்,ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் பயின்றார்.முனைவர் பட்டம் பெற்றவர்.

சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மன்மோகன் சிங்க சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று(டிசம்பர் 26) உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

அவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மேலும் முழுமரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது புகழ்வாய்ந்த தலைவர்களில் ஒருவரை இழந்து விட்டது என்று அவர் கூறினார்.