மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது.
ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது.
லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது.
அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.