சகராடா ஃபமிலியா தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! 24/12/2024 / #sgnewsinfo, #worldnews சகராடா ஃபமிலியா தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!!! இசை மழையில் நனைந்த மக்கள்...!!! உலகின் மிகப்பெரிய தேவாலயமாகக் கருதப்படும் சகராடா ஃபமிலியா தேவாலயத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.ஸ்பெயினின் பார்சிலோனாவில் அமைந்திருக்கும் இந்த தேவாலயத்தில் வருடாந்திர கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதன் கட்டுமானம் 1882 இல் தொடங்கியது.சுமார் 140 ஆண்டுகள் கடந்தும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.2030 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் என பார்க்கப்படுகிறது.அதன் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு...!!!! அப்போது இது ஐரோப்பாவின் மிக உயரமான தேவாலயம் என்ற பெருமையைப் பெறும்.தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடையவில்லை என்றாலும், அங்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தன.மனதை மயக்கும் பல்வேறு கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன.மக்கள் அதை ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.பிரபலமான நட்கிராக்கரின் பாடல்களின் சில பகுதிகளும் வாசிக்கப்பட்டன. OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி...!!!