"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு"..!!!!எச்சரிக்கும் காவல்துறை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
74 வாகனமோட்டிகளுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமான அளவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 31 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மது அருந்தி பிடிபட்டவர்களில் அதிகமானோர் அனுமதிக்கப்படும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்.
2022ல் இதுபோன்ற 175 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு (2023), குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 180 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 142 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதில் 10 சம்பவங்கள் மரணத்தில் முடிந்தது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் தனக்கும் சாலையில் செல்லும் பிற உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பதால் வாகனமோட்டிகள் முறையான சாலை விதிமுறைகளை கடைபிடிக்குமாறு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கிறது.