திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!!

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு...!!!!

மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து அடர்ந்த புகை வெளிவருவதை கண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று (டிசம்பர் 23) இரவு 7.10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் தீயை பத்திரமாக அணைத்தனர்.

தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் தீயை பத்திரமாக அணைத்தனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

கடைத் தொகுதிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா முழுவதிலும் உள்ள வணிக வளாகங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறையின் போது அதிகளவிலான வருகையைக் காணும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.