சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!

சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் அக்டோபரில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1.9 சதவீதமாக சரிந்துள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என்று கூறப்படுகிறது.

மாத அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லை.

உணவு மற்றும் சேவை போன்ற துறைகளில் பணவீக்கம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறுகிறது.

அனைத்து பொருட்களுக்குமான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது அக்டோபர் மாதம் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக பதிவானது.