காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமற்போனது.கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமற்போனது.

அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.

புதிய தேடல் பகுதி நிபுணர்களின் ஆய்வு தகவல் அடைப்படையில் பரிந்துரைக்கப்ட்டுள்ளதாக கூறினார்.

அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனத்துடன் மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.