நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!!
நண்பரின் முகத்தில் பிளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய 76 வயதுடைய Lee Ah Cheng என்ற முதியவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையோடு $1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறியதால் கூடுதலாக இரண்டு நாட்கள் லீ சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த முதியவர் ஒரு அந்நியர் வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது Superglue வை தடவியதால் அதனை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தியுள்ளார்.
கடந்த 2023 ஆம் தேதி அக்டோபர் மாதம் இரவு 10 மணியளவில் யூஹீவா வில்லேஜ் சந்தையில் உணவு நிலையத்துக்கு அவரது நண்பரை சந்திப்பதற்காக சென்றிருந்தார்.அப்போது அவர்களிடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.
அவரது நண்பர் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றினார்.நண்பரின் சட்டை மற்றும் முகத்திலும் ஊற்றினார்.
இருவரையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
மற்றொரு சம்பவம் : இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 4 இல் தனது நண்பரை காண்பதற்காக லீ சென்றுள்ளார்.
ஆனால் அவரது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது ஒரு வீட்டின் முன்பு அலங்கோலமாக இருப்பதைக் கண்டு கோபமடைந்தார்.
அவரிடம் இருந்த Superglue எடுத்து அந்த வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது தடவி விட்டு அதன் பின் அங்கிருந்து சென்று விட்டார்.
அங்கிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.