சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!!

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதிகள் நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டது.

அந்த வகையில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது 3.4% வளர்ச்சி கண்டது.

எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியானது கடந்த அக்டோபர் மாதம் 7.5% வீழ்ச்சியைக் கண்டது.

ஆனால் அதுவே கடந்த நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியாக 14.7% வளர்ச்சியை கண்டது.

டிசம்பர் 17 அன்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதை தெரிவித்தன.

முன்னதாக புளூம்பெர்க் கருத்தாய்வில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி நவம்பர் மாதத்தில் 1 சதவீதம் குறையும் என்றும் அதுவே ஆகஸ்ட் மாதம் நான்கு முதல் ஐந்து சதவீதமாக இருக்கும் என்றும் கணித்தனர்.

2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதி எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்பதால் சிங்கப்பூரின் முழு ஆண்டு ஏற்றுமதி கணிப்பு குறைக்கப்பட்டது.

எண்ணெய் அல்லாத உள்நாட்டு பொருட்களின் ஏற்றுமதி அடுத்த ஆண்டு மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு அடிப்படையில், எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி அக்டோபரில் 2.6 சதவீதமாக பதிவானது. ஆனால் அதுவே நவம்பர் மாதத்தில் 23.2 சதவிகிதம் அதிகரித்தது.

நவம்பர் மாதத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 1.6 சதவீதம் குறைந்துள்ளது. இது அக்டோபரில் 6.8 சதவீதம் சரிந்தது.

மருந்து ஏற்றுமதியில் 63.8 சதவீதம் சரிவு ஏற்பட்டதே இந்த சரிவுக்கு காரணம்.

நவம்பர் மாதத்தில் தைவான், ஹாங்காங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே 42.7 சதவீதம், 35.3 சதவீதம் மற்றும் 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும், அமெரிக்கா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.