சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!!

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்...!!!

சீனாவை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் 2 பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

தற்பொழுது கடந்த மாதம் (நவம்பர்) 26ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இரண்டு பிரசவங்களில் பிறந்த ஐந்து குழந்தைகளும் இயற்கையாகவே கருவுற்றவை என்றும் அவர் கூறினார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களுடன் பகிர்ந்துள்ளார்.

சீன நாட்காட்டியின்படி கடல் நாகத்தின் ஆண்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பியதாக அந்தப் பெண் கூறினார்.

எனினும், தனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.