சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!!

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!!

மண்டாய் ரோட்டில் Sambar வகையைச் சேர்ந்த மான் ஒன்று உயிரிழந்து காணப்படும் படம் “Love Sambar” முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மான் மீது முதலில் லாரியும்,அதன்பின் பைக் ஒன்றும் மோதி யதாக 8World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

மான் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது.

இச்சம்பவம் குறித்து டிசம்பர் 2 ஆம் தேதி (நேற்று) சுமார் 6.40 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் கூறியது.

உயிரிழந்த மான் சிலேத்தர் நீர்தேக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.